லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த 2018ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் இணைந்து நடித்து வெளியான படம் 96. காதல் தோல்வியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை தெலுங்கிலும் சர்வானந்த், சமந்தா நடிப்பில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்தார் பிரேம்குமார். ஆனால் ஜானு படம் அங்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கி இருக்கும் பிரேம்குமார், அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், ‛‛96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி விட்டேன். இந்த கதையை நடிகர் விஜய் சேதுபதியின் மனைவியிடம் சொன்ன போது அவர் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். அதனால் அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவே நடிப்பார்கள்'' என்று தெரிவித்திருக்கிறார் பிரேம்குமார்.