பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

சினிமாவில் கிருஷ்ணர் வேடம் போட்டு ஆந்திர மக்களின் கிருஷ்ணராகவே மாறியவர் என்.டி ராமராவ். ஆனால் அடிப்படையில் அவர் நடிக்க விரும்பியது ராவணனாக. 1958 ஆம் ஆண்டு வெளிவந்த 'புகைலாஸ்' என்ற தெலுங்கு படத்தில் ராவணனாக நடித்தார். அந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அவரது கேரக்டரும் பேசப்பட்டது. ராவணன் ஒரு சிறந்த அறிஞர், இசைக்கலைஞர், சிவபெருமானின் தீவிர பக்தர், பெரும் நற்குணங்களை கொண்டவர். ஆனாலும் அவரை வீழ்த்தியது பெண்ணாசை. இந்த கேரக்டர் என்.டி ராமராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தடுத்த புராண படங்களில் ராவணனாக நடிக்க விரும்பினார்.
இதற்கு தாமதமாகவே தானே சொந்தமாக தயாரித்து, நடித்த படம் 'சீதாராம கல்யாணம்'. சீதை, ராமனின் திருமணத்தை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் ராவணன் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படமாக வெளிவந்தது.
என்டிஆரின் நண்பரான தனேகுல புச்சி வெங்கட கிருஷ்ண சவுத்ரி படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டி ராமராவ் தயாரித்த முதல் படம் இது. இந்த படத்தை என்.டி.ராமராவ் இயக்கினார் என்றும், ஆனால் டைட்டில் கார்டில் தனது நண்பரின் பெயரை போட்டு கொண்டார் என்றும் கூறப்படுவது உண்டு.