'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி' | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை |
புதிய படங்கள் வெளியாகும் போது அந்தப் படங்களுக்கான 'புரமோஷன்' என பல தனியார் கல்லூரிகளில் அந்தப் படங்களின் நடிகர்கள், நடிகைகள் மற்ற கலைஞர்கள் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். மேலும், இளைஞர்கள் கூட்டத்தை அதிகம் காட்ட வேண்டும் என்பதற்காக சென்னை உள்ளிட்ட சில மாநகரங்களில் கல்லூரி மாணவர்களை வரவழைத்து இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு உள்ளிட்ட விழாக்களை திரையுலகினர் நடத்தி வருகிறார்கள்.
இளைஞர்கள்தான் இப்போது திரைப்படங்களைப் பார்க்க அதிகம் வருகின்றனர் என்பதால் இப்படியான நிகழ்வுகள் கடந்த சில வருடங்களில் அதிகம் நடக்கிறது. அதற்கு கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் ஏற்கெனவே எழுந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களோ, பல்கலைக்கழக நிர்வாகங்களோ, உயர்கல்வித் துறையோ அப்படியான விழாக்கள் நடத்தப்படுவதை இதுவரையிலும் தடுக்காமல் உள்ளார்கள்.
சமீபத்தில் கூட விக்ரம் நடித்து வெளிவந்த 'தங்கலான்' படத்தின் புரமோஷனுக்காக சில ஊர்களில் உள்ள கல்லூரிகளுக்கு விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் சென்று வந்தனர்.
தற்போது மதுரையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் டிவி நகைச்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்ள இருப்பது குறித்து புத்தக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. புத்தக விழாவிற்கு எதற்கு நடிகரை அழைக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. உடனடியாக அவருக்குப் பதிலாக வேறொரு பேச்சாளரை மாற்றிவிட்டனர்.
கல்லூரிகள், கல்வி நிலையங்களில் சினிமா விழாக்களை நடத்துவதற்கு திரையுலகத்தில் இருந்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.