ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
'ஏஐ' தொழில்நுட்பம் சினிமாவில் நுழைந்த பின் இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என சில விஷயங்கள் நடந்து வருகின்றன. இறந்தவர்களின் குரல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவர்களது குரலை மீண்டும் கேட்க வைப்பதும், இறந்தவர்களின் உருவத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவர்களது உருவத்தை பார்க்க வைப்பதும் நடக்க ஆரம்பித்துள்ளது.
இறந்தவர்களின் குரலுக்கு உயிர் கொடுப்பதை 'லால் சலாம்' படத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ஆரம்பித்து வைத்தார். மறைந்த பின்னணிப் பாடகர்களான ஷாகுல் அமீது, பாம்பே பாக்யா ஆகியோரது குரல்களை 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம் மீண்டும் பாட வைத்தார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'திமிரி எழுடா' என்ற பாடல் அப்படி உருவாக்கப்பட்டது.
அதற்கடுத்து மறைந்த பின்னணி பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் குரலை அத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 'தி கோட்' படத்தில் 'சின்னச் சின்னக் கண்கள்' பாடலை உருவாக்கினார் பவதாரிணியின் தம்பியும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா. அந்தப் பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று வெளியாக உள்ள 'வேட்டையன்' படப் பாடலான 'மனசிலாயோ' பாடலை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
இது குறித்து, “27 வருடங்களுக்குப் பிறகு தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக மலேசியா வாசுதேவன் சார்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு மலேசியா வாசுதேவனின் மகன் நடிகரும் பாடகருமான யுகேந்திரன், “நன்றி அனி ப்ரோ… என்ன ஒரு தருணம்.. உங்களுடன் பணி புரிந்தது மகிழ்ச்சி... இன்னும் வர வேண்டும். நீங்கள் கலக்குங்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என பதிலளித்துள்ளார்.