பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் | ரோபோ சங்கர் உடலுக்கு கமல் அஞ்சலி | பிளாஷ்பேக்: அமரத்துவம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் “அமரகவி” | டிரஸ் வாங்க பணமின்றி புரமோஷனுக்கு படப்பிடிப்பு உடைகளையே அணிந்த விஜய் தேவரகொண்டா | திரிஷ்யம் 3 ரிலீஸ் முதலில் மலையாளத்தில்.. பிறகுதான் ஹிந்தியில் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | உன்னி முகுந்தன் விலகிய நிலையில் மார்கோ 2ம் பாக டைட்டில் அறிவிப்பு | மீண்டும் வெளியாகும் அவதார் வே ஆப் வாட்டர் | பிளாஷ்பேக் : தோல்வி அடைந்த 3டி படம் | பிளாஷ்பேக்: ஆர்.எஸ்.மனோகர் நாயகனாக நடித்த லக்ஷ்மி | பாகுபலி பாணியில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் விருஷபா |
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் பின்னால் அவர்களது நண்பராக பத்தோடு பதினொன்றாக நடித்து பின்னர் வில்லனாக, குணச்சித்திர நடிகராக என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முன்னணி ஹீரோவாக தற்போது வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தொடர்ந்து வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து வெற்றியை பெற்று வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.
மலையாள திரையுலகை சேர்ந்த துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் நிலையில் தனக்கு மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே போதும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் டொவினோ தாமஸ். தமிழில் மாரி -2 என்கிற ஒரு படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டாததற்கு அவர் கூறிய காரணம்தான் அடடே என ஆச்சரியப்பட வைக்கிறது
இதுபற்றி அவர் கூறும்போது, “ஹிந்தியில் அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் (சித்தார்த் நடித்தது) நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் இங்கே படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் அதில் நடிக்க இயலாமல் போனது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதனால் நாம் இன்னொரு மொழிக்கு சென்று அவர்களில் யாரோ ஒருவர் வாய்ப்பை தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் என எதுவும் இல்லை. அப்படியே மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மும்பையில் அல்லது ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு மலையாளி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மறுக்காமல் ஒப்புக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.