நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள ‛தி கோட்' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்றே நாளில் கிட்டத்தட்ட 200 கோடி வசூலை இந்த படம் தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு சம்பளமாகவே 200 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என அதன் தயாரிப்பாளர் கூறியதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அந்த வகையில் தமிழில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிக்கு அடுத்தபடியாகவோ அல்லது ரஜினிக்கு இணையாகவோ விஜய் இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது கடந்த 2023-24ம் வருடத்திற்கான வருமான வரி செலுத்திய நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் விஜய். இந்த ஒரு வருடத்திற்காக அவர் 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே வருடத்தில் பாலிவுட் சீனியர் நடிகர்களான அமிதாப்பச்சன் 75 கோடியும், சல்மான் கான் 71 கோடியும் வருமான வரி செலுத்தி அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த குறிப்பிட்ட ஒரு வருட காலத்தில் விஜய் நடிப்பில் லியோ மற்றும் கோட் என இரு படங்கள் வெளியாகி இருப்பதால் அவர் அதிக அளவில் வரி செலுத்தி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.