பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
மலையாள நடிகரான விநாயகன், தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்த ‛ஜெயிலர்' படத்தில் வர்மன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சினிமாவில் வில்லனாக நடித்து வரும் விநாயகன் திரைக்குப் பின்னாலும் தனது வில்லத்தனத்தை அவ்வப்போது காண்பித்து சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகிறார்.
ஏற்கனவே போலீசாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட விநாயகன், நேற்று கொச்சியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கோவாவிற்கு சென்றவர், ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத் விமான நிலையத்தில் இறங்கி இருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த விநாயகன் அங்கிருந்த சிஐஎஸ்எப் போலீஸ் அதிகாரிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.