இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மலையாள சினிமாவில் பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன்பின் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் உடன் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். சமுத்திரகனி நடித்த ‛சித்திரை செவ்வானம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.
வினீத் என்பவரை காதலித்து வந்த பூஜா கண்ணனுக்கு சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாய் நடந்தது. அதில் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்தினர். இப்போது பூஜா - வினீத்திற்கு திருமணம் நடந்துள்ளது. சாய் பல்லவி குடும்பம் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள். அதனால் கோத்தகிரியில் படுகர் இன பாரம்பரிய முறைப்படி பூஜா திருமணம் நடைபெற்று உள்ளது.
முன்னதாக திருமணத்திற்கு முந்தையதாக நடக்கும் திருமண சடங்குகளும் கோலாகலமாய் நடந்துள்ளது. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகின.




