ரஜினிகாந்தின் 'வேட்டையன்' முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | வெற்றிமாறனின் விடுதலை-2 படத்தின் டப்பிங் தொடங்கியது | சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர்- நவம்பரில் வெளியாகிறது!! | வேட்டையன் படம் பார்க்கச் சென்ற வீடியோவை வெளியிட்ட துஷாரா விஜயன்! | சர்ச்சை எதிரொலி! ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்! | ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி | ஹனுமான் இயக்குனர் தயாரிப்பில் 'சூப்பர் உமன்' படமாக உருவாகும் மகாகாளி | வேட்டையன் டைட்டில் அதிருப்தி ; ரசிகர்களிடம் ராணா சமாளிப்பு | 6வது வாரத்தில் 'தி கோட்', 4வது வாரத்தில் 'லப்பர் பந்து' | கிராமி விருது தேர்வில் ஆடுஜீவிதம் வெளியேறியது ஏன் ? ஏ.ஆர் ரஹ்மான் விளக்கம் |
நானி நடிப்பில் அண்மையில் வெளியான 'சூர்யாஸ் சாட்டர் டே' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து நானி நடிக்கும் படம் 'Hit: The 3rd Case'. இந்தப் படத்தை சைலேஷ் இயக்கியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு 'HIT: The First Case' வெளியானது. அடுத்து 2022-ல் 'HIT: The Second Case' வெளியானது. தற்போது இந்த சீரிஸின் 3-ம் பாகத்தில் நானி நடிக்கிறார். இந்த படத்தை யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வால் போஸ்டர் சினிமா சார்பில் பிரசாந்தி திபிர்னேனி, தயாரிக்கிறார். சைலேஷ் கொலானு இயக்குகிறார். இது நானியின் 32வது படம். ஜானு ஜான் ஒளிப்பதிவு செய்கிறார், விக்கி ஜி மேயர் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு மே 9ல் வெளி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது