ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு மலையாள சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. முகேஷ், இடைவேள பாபு, ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் பிரபலமான நடிகரான ‛பிரேமம்' புகழ் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு தருவதாக சொல்லி நிவின் பாலி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.