சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் பலத்த வரவேற்புடன் நடந்து வருகிறது. அதன் பின் கடந்த சில வருடங்களாக பல மாநிலங்களுக்குள் இது போன்ற கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் என்ற பெயரில் 2016ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
அது போலவே, கேரளாவில் கேரள கிரிக்கெட் சங்கம் சார்பாக 'கேரளா கிரிக்கெட் போட்டிகள்' இந்த ஆண்டு முதல் நடக்க ஆரம்பித்துள்ளன. திருவனந்தபுரம் ராயல்ஸ், திருச்சூர் டைட்டன்ஸ், கொச்சி ப்ளூ டைகர்ஸ், கொல்லம் சைலர்ஸ், காலிகட் குளோப் ஸ்டார்ஸ், ஆலப்புழை ரிப்பிள்ஸ் என ஆறு அணிகள் அதில் கலந்து கொள்கின்றன. செப்டம்பர் 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்க உள்ளன. நடிகர் மோகன்லால் இந்த போட்டிக்கான பிராண்ட் அம்பாசிடர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியின் ஓனர்களில் ஒருவராக உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது குறித்து, “கேரளா கிரிக்கெட் சங்கம் நடத்தும் கேரளா கிரிக்கெட் லீக்கின் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. எனது குரு பிரியதர்ஷன் சாருடன் எனது சினிமா பயணத்தைத் தொடங்கினேன். இப்போது அவருடன் இணைந்து இந்த புதிய முயற்சியில் ஈடுபடுவது நம்ப முடியாததாக இருக்கிறது. இதற்கு உங்களது அன்பும் ஆதரவும் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளதால் தனது கிரிக்கெட் அணி பயணத்தையும் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார் கீர்த்தி.