25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. இருவரும் இணைந்து 'மஹா சமுத்திரம்' படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டார்கள். அவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் காதல் என செய்திகள் வந்தன. ஆனால், இருவரும் இதை மறுக்கவில்லை. அதன்பின் அவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு துவக்கத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
இருவரது திருமணமும் எப்போது நடக்கும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே இருவரும் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில் அவர்களது திருமணம் எங்கு நடக்கப் போகிறது என்பது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்கள்.
அதிதியின் பெற்றோர், அந்தக் கால ஐதராபாத் மாநிலத்தின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது முன்னோர் வனர்பதி ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
அதனால், தங்களது திருமணம் தங்களது முன்னோர்களால் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வனர்பதி கோயிலில் நடக்கும் என்று அதிதியும், சித்தார்த்தும் தெரிவித்துள்ளார்கள்.