தனுஷ் இயக்கும் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | 5 வருஷம் கழிச்சு ரொமான்டிக் படம் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ் தகவல் | 20 ஆண்டுகளுக்குப் பின் காமெடி ஹாரர் படத்தில் இணையும் பிரபுதேவா - வடிவேலு | மகன்களின் கையால் ஊழியர்களுக்கு விஜயதசமி பரிசளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | காப்பிரைட் பிரச்னை தீராமல் ரிலீஸ் செய்யக்கூடாது : மோகன்லால் பரோஸ் படம் மீது வழக்கு | நடிகையின் புகார் எதிரொலி : லப்பர் பந்து நாயகி மீது கேரள போலீசார் வழக்கு | விசாரணைக்கு ஒத்துழைக்க அடம்பிடிக்கும் நடிகர் சித்திக் : விரைவில் கைதாக வாய்ப்பு | பிரச்னையிலிருந்து வெளிவர பிசாசு நடிகைக்கு உதவிய வேட்டையன் வில்லன் நடிகர் | அந்தரங்க லீக் வீடியோவுக்கு தில்லாக பதில் அளித்த ஓவியா |
மதுரை : தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் கோட் படத்தை மதுரை உட்பட ஆறு மாவட்டங்களில் செப்., 5ல் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலை 9:00 மணி காட்சிக்கு, 700 ரூபாய் கட்டணம் வசூலித்து தர வேண்டும் என வினியோகஸ்தரான ராகுல் வற்புறுத்துவதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் உரிமையாளர் ராகுல் பெற்றுள்ளார்.
அரசு விதிப்படி காலை 9:00 மணிக்கு படம் திரையிடப்பட உள்ளது. இதற்கான கட்டணம் 190 ரூபாய். இதை மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வசூலிக்கலாம். தனி தியேட்டர்களில் 700 ரூபாய் வசூலிக்க வேண்டும் என, ராகுல் தரப்பில் மதுரை உட்பட ஆறு மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த உரிமையாளர்கள், செப்., 5ல் படத்தை திரையிடுவதா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தியேட்டர்களின் 'சீட்' எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டு, 700 ரூபாய் கட்டணம் செலுத்தாவிட்டால் செப்., 5 காலை 9:00 மணி காட்சிக்கு 'கியூப்' ஆன் செய்ய மாட்டோம் என ராகுல் தரப்பில் மிரட்டுகின்றனர்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரசிகர்களின் எதிர்ப்புக்கும், அரசின் நடவடிக்கைக்கும் நாங்கள் ஆளாக வேண்டியிருக்கும். இந்த குழப்பத்தால் ஆன்லைன் புக்கிங் செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. அதே சமயம் மால் தியேட்டர்களில் 'புக்கிங்' முடிந்துவிட்டது.
பல தியேட்டர்கள் இன்று வணிக வளாகமாக, குடியிருப்புகளாக மாறிவிட்டன. மீதமுள்ள தியேட்டர்களை காலி செய்யும் நடவடிக்கையாகத் தான் இதை பார்க்கிறோம். ஏற்கனவே ஓ.டி.டி., பிளாட்பாரங்களில் படங்களை வெளியிடுவதால் பல தியேட்டர்கள் 'ஹவுஸ்புல்' ஆவதே கிடையாது.
'ஸ்டார்' அந்தஸ்து நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தான் ஓரளவுக்கு போட்ட முதலீட்டை கையை கடிக்காமல் சிறிது லாபத்துடன் எடுக்க முடிகிறது. அதற்கும் இப்படி 'செக்' வைத்தால் எப்படி? இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா வினியோகஸ்தராக இருந்த அமைச்சர் உதயநிதிக்கு, எங்கள் பிரச்னைகள் தெரியும் என்பதால் அவர் இதில் உதவ வேண்டும்.
இவ்வாறு கூறினர்.