'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தக் லைப்'. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக சிம்பு சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அந்த சண்டைக் காட்சிகளை படமாக்கி உள்ளார்கள்.
காலை முதல் நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் தொடர்ந்து அதில் சிம்பு நடித்துள்ளார். அந்த நாட்களில் சிம்புக்கு கடும் ஜுரம் இருந்ததாம். இருந்தாலும் அந்த நாட்களில் படப்பிடிப்பு நடத்தியே ஆக வேண்டும் என்பதால் தனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தாராம். 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் நடித்த இடைவேளைக் காட்சி சண்டையில் பயன்படுத்தப்பட்ட 'மோகோபாட்' ரோபோட்டிக் கேமரா கொண்டு அந்தக் காட்சியை படம் பிடித்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். படத்தில் உள்ள ஹைலைட்டான சண்டைக் காட்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.