ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
90களின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மற்ற மொழிகளிலும் சில நடிகர்களை மிகவும் பிடிக்கும். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் இன்று வரையிலும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிலிருந்து நிறைய டப்பிங் படங்கள் தமிழில் வெளியாகும். அப்படி வெற்றி பெற்றவர்களில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா படங்கள் அதிகம். நாகார்ஜூனா தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வந்த 'இதயத்தை திருடாதே, உதயம்' ஆகிய படங்கள் இங்கு 175 நாட்கள் ஓடிய படங்கள். அதன்பின் தமிழில் 'ரட்சகன், தோழா' என இரண்டு நேரடிப் படங்களில் நடித்தார் நாகார்ஜூனா.
தற்போது தனுஷ் நடித்து வரும் இரு மொழிப் படமான 'குபேரா' படத்தில் நாகார்ஜூனா நடித்து வருகிறார். அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாகார்ஜூனாவின் பிறந்தநாளான நேற்று வெளியானது.
“நன்றி.. லோகி. 'கைதி' படத்திலிருந்தே உங்களுடன் பணி புரிய காத்திருக்கிறேன். நமது பயணத்திற்காக உற்சாகமாக இருக்கிறேன். 'தலைவர்' உடன் திரையைப் பகிர்ந்து கொள்ளவும் எதிர்நோக்கி உள்ளேன்,” என 'கூலி' படத்தில் நடிப்பது குறித்து நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.