'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சிறுவர்கள் பொன்வேல், ராகுல் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க, கடந்த வாரம் வெளியான படம் 'வாழை'. இப்படம் விமர்சகர்களின் வரவேற்பையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. சில விவாதங்களையும் இந்தப் படம் முன் வைத்தது.
இதனிடையே, எழுத்தாளர் சோ தர்மன் அவருடைய பேஸ்புக்கில் நேற்று ஒரு பதிவிட்டு 'வாழை' படம் பற்றிய குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். அந்தப் பதிவில்,
ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன்.
“என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை.
என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி" என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.
கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்". என்னை வாழை வாழ வைக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பேஸ் புக் பதிவில் பலரும் பலவிதமான ஆதரவு, எதிர்ப்புக் கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் அவரது சமூக வலைத்தளங்களில், சோ தர்மன் எழுதிய கதையின் லின்க்கைப் பகிர்ந்து, ““வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி,” என சிம்பிளாக முடித்துக் கொண்டார்.
சிறுகதையின் லின்க்கை வைத்து படித்து இரண்டுக்கும் என்ன ஒற்றுமை உள்ளது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளட்டும் என இருவருமே சொல்லிவிட்டார்களோ ?....