ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இன்றைக்கு சினிமா பல கோடிகள் புழங்குகிற பொழுதுபோக்கு துறையாக வளர்ந்திருக்கிறது. 1000 தியேட்டர்கள், ஆண்டுக்கு 250 படங்கள், 1500 கோடி வரவு செலவு என சினிமா உயர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவை முதன் முறையாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். தமிழ் சினிமாவின் தந்தை என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறவர்.
கோயம்புத்தூரை சேர்ந்த சாமிக்கண்ணு திருச்சி ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். அப்போது 1905ம் ஆண்டு ரயில்வே துறைக்கு பிரான்சை சேர்ந்த டுபாண்ட் என்ற அதிகாரி வந்தார். அப்போது அவர் தனது வீட்டில் சினிமா பார்ப்பதற்காக ஒரு புரொஜெக்டர் கொண்டு வந்தார். வந்த சில நாட்களிலேயே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே நாடு திரும்ப விரும்பினார். அப்போது அவரிடம் இருந்த புரொஜக்டரை 2 ஆயிரத்து 250 ரூபாய்கு வாங்கினார். அது அப்போது மிகப்பெரிய தொகை.
நமக்கு அறிமுகமில்லாத ஒரு கருவி. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியாது அதற்கு இவ்வளவு பெரிய பணமாக என்று உறவினர்கள் அவரை எச்சரித்தார்கள். ஆனால் டுபாண்ட் அந்த கருவி மூலம் 'லைப் ஆப் ஜீசஸ்' என்ற மவுன படத்தை திரையிட்டதை பார்த்த பிறகு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவர் உறவினர்களிடம் இந்த கருவி எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தி வாய்ந்ததாக அமையும் என்று உறவினர்களை சமாதானப்படுத்தி பணம் திரட்டி அதனை வாங்கினார்.
புரொஜக்டரை கொடுத்து சென்ற டுபாண்ட் மூலம் பிரான்சிலிருந்து சில மவுன பட ரீல்களை வாங்கினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாத்தில் அதனை திரையிடுகிறார். சலனப்படத்தை பார்த்து மக்கள் ஆச்சர்யமடைகிறார்கள். இவர் ஏதோ பூச்சாண்டி காட்டுகிறார் என்று அப்பாவி மக்கள் சிதறி ஓடுகிறார்கள்.
புரொஜெக்டரையும், பிலிம் ரோல்களையும் தூக்கி சுமந்து தமிழ்நாடு முழுக்க பயணித்து மக்களுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தினார். அது பல்கி பெருகி பின்னாளில் தியேட்டர் கட்டினார், படங்கள் தயாரித்தார்.