ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சில பல பஞ்சாயத்துகள், வழக்குகள் ஆகியவற்றால் தட்டுத் தடுமாறி எழும்பி வருகிறது. கட்டிட வேலைகள் ஆரம்பமாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதை விரைந்து முடிக்க தற்போதைய நிர்வாகக் குழுவினர் முயன்று வருகிறார்கள்.
ஏற்கெனவே நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், நெப்போலியன், தனுஷ், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தலா 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கினார்கள். அதையடுத்து நின்று போன கட்டிட வேலைகள் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஆரம்பமானது.
இருந்தாலும் இன்னும் சில கோடிகள் இருந்தால் தான் கட்டிட வேலைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளதாம். எனவே, வெளிநாடுகளில் நடிகர் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தி தேவையான நிதியைப் பெற ஆலோசித்து வருகிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் இது குறித்து சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அடுத்து நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆலோசித்துள்ளார்கள். விரைவில் கலை விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.