இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கோட். அவருடன் பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வருகிறது. அதோடு அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இந்த கோட் படம் வெளியிடப்பட உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில், ஸ்பார்க் என்ற பாடல் வெளியானபோது, விஜய்யை டி-ஏஜிங் டெக்னாலஜியில் காண்பித்த தோற்றம் விமர்சனங்களை சந்தித்தது. இப்படியான நிலையில், கோட் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.