புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் |
விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்ரம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், விஜய், அஜித், சூர்யாவை விட உங்களுக்கு குறைவான ரசிகர்கள் இருப்பது ஏன்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விக்ரம் பதிலளிக்கையில், என் ரசிகர் பட்டாளம் குறித்து உங்களுக்கு சரியாக தெரியவில்லை. இந்த தங்கலான் படம் திரைக்கு வரும் போது தியேட்டருக்கு வந்து பாருங்கள். எனக்கு எவ்வளவு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அப்போதுதான் உங்களுக்கு தெரியும். எனக்கு டாப் 3, 4 எல்லாம் வேண்டாம். எல்லா நடிகர்கள் ரசிகர்களும் எனக்கு ரசிகர்கள்.
சாமி, தூள் மாதிரியான கமர்ஷியல் படங்கள் எல்லாம் பண்ணிட்டேன். சினிமாவில் என்னுடைய தேடல் என்பதே வேறு. புது பரிமாணங்களில் புதுமையான கதைகளில் நடித்து சினிமாவை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இப்போது விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் இல்லை என்று கூறும் நீங்கள் இதே கேள்வியை அவர்களிடமும் ஒரு நாள் கேட்பீர்கள் என்று பதில் அளித்தார் விக்ரம்.