22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கங்குவா படத்தை முடித்துவிட்ட சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூர்யா ஊட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் சூர்யாவின் நண்பரும் அவரது 2டி நிறுவன தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன் இதுகுறித்து சூர்யா ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக, “அன்பான ரசிகர்களே. அது வெறும் சிறிய காயம் தான். அதனால் கவலைப்பட வேண்டாம். உங்களது அன்பாலும் பிரார்த்தனையாலும் சூர்யா அண்ணா தற்போது நன்றாக இருக்கிறார்” என்று ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.