மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் |
பிரபல டிவி நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்றார். கடந்த 2020, டிச., 9ல் சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள ஒரு தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். சித்ராவின் தற்கொலைக்கு இவர் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து சிறையில் இருந்து வந்த ஹேமந்த், மார்ச் மாதம் ஜாமினில் விடுதலை ஆனார்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹேமந்த்தை குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவரை நிரபராதி என அறிவித்து இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.