'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட். அவருடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த் , பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் திரைக்கு வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் என்ற இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த இரு பாடல்களையும் விஜய் பாடியிருந்தார். இப்போது ஸ்பார்க் என்ற மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை யுவன் ஷங்கர் ராஜாவும், விருஷா பாலுவும் பாடி உள்ளனர். கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஆங்கில வார்த்தைகள் அதிகம் கலந்துபடி இன்றைய ரசிகர்களை கவரும் விதமாக இந்த பாடலை எழுதி உள்ளார் கங்கை அமரன். விஜய் - மீனாட்சி சவுத்ரியே இடையேயான துள்ளல் பாடலாக வெளிவந்துள்ளது.