நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
மலையாள நடிகை பார்வதி தனக்கு ஏற்ற கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனாலேயே மற்ற நடிகைகளில் இருந்து அவர் விரைவில் வித்தியாசப்பட்டும் தெரிகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் கூட அவரது வித்தியாசமான நடிப்பை பறைசாற்றும் விதமாகவே இருந்தது. இதை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் நடிக்க வராவிட்டால் என்ன செய்திருப்பீர்கள் என்கிற வழக்கமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பலரும் நான் டாக்டராகி இருப்பேன், பிசினஸ் உமன் ஆகி இருப்பேன் என்பது போன்று தான் இதுவரை பதில் சொல்லி பார்த்திருக்கிறோம். ஆனால் இதிலும் வித்தியாசமாக நான் நடிக்க வராவிட்டால் நிச்சயமாக டீக்கடை ஆரம்பித்திருப்பேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பார்வதி. மேலும் இந்த உலகத்தில் ஒவ்வொரு வேலையும் தனக்கென ஒரு கவுரவத்தை வைத்திருக்கிறது. அதனால் டீக்கடை தொழிலிலும் நிச்சயமாக ஏதாவது சாதித்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.