இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோரும் சிறையில் இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடிகர் தர்ஷன் தனக்கு தனது வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும் படுத்து உறங்குவதற்காக மெத்தை மற்றும் உடுத்துவதற்கு தனது சொந்த துணி ஆகியவை வேண்டும் என்றும் கேட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.
வியாழனன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. தர்ஷனின் சார்பாக வாதிட்ட அவரது வழக்கறிஞர் சிறையில் கொடுக்கப்படும் குறைந்த அளவிலான உணவு தர்ஷனின் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கு ஏற்றதாக, போதுமானதாக இல்லை. அதனால் பக்க விளைவாக அவருக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே அவருக்கு வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும். அவருக்கு படுத்து உறங்குவதற்கு மெத்தை தரவும் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனாலும் இந்த வாதத்தில் திருப்தி அடையாத நீதிபதி விஸ்வநாத் சி கவுடர் தர்ஷனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.