டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின்,விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெய்ராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்காக கடந்த பல மாதங்களாக சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது; இதில் ஒரு பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என கூறப்பட்டது தொடர்ந்து. இப்போது மீதமுள்ள மூன்று பாடல்களையும் மிஷ்கின் பாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மிஷ்கின், கண்ணதாசன் காரைக்குடி, இவன் துப்பறிவாளன், தங்ககதி போன்ற சில பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.