சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

தமிழில் ஏற்கனவே வெளியான பல சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் விக்ரமன் இயக்கி சூப்பர் ஹிட்டான சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னை நினைத்து போன்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்று ஒரு பேட்டியில் அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் இயக்கிய சூர்ய வம்சம், வானத்தைப் போல என்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை. குறிப்பாக, வானத்தைப் போல படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் அளவுக்கு இப்போதைக்கு நடிகர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த முயற்சிகளை கைவிட்டு விட்டேன். சூர்யா நடிப்பில் இயக்கிய உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டேன். ஆனால் பாதிக்கு மேல் அந்த ஸ்கிரிப்ட் வரவில்லை என்பதால் அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டேன். அதனால் நான் இயக்கிய எந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கப் போவதில்லை என்கிறார் விக்ரமன்.