விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் கதாநாயகர்களாகவும் வலம் வந்த வரலாறு இதற்கு முன்பு உண்டு. என்எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு என்ற அந்த பட்டியலில் சூரியும் இணைந்துவிட்டார்.
ஆனாலும், கதாநாயகனாக அடுத்தடுத்து இரண்டு 50 நாட்கள் படங்களைக் கொடுத்துவிட்டார் சூரி. கடந்த வருடம் வெளிவந்த 'விடுதலை பாகம் 1' படமும் 50 நாட்கள் ஓடியது. மே மாதம் 31ம் தேதி வெளிவந்த 'கருடன்' படமும் நேற்றோடு 50 நாட்களைத் தொட்டுள்ளது.
முக்கிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் அடங்கிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து, “உங்களின் பேராதரவுடன் இன்று வெற்றிகரமான 50வது நாள்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் சூரி.
'விடுதலை, கருடன்' இரண்டு படங்களுமே வழக்கமான கமர்ஷியல் படங்கள் அல்ல. கதை, கதாபாத்திரங்கள் என பேசப்பட்ட மாறுபட்ட படங்களாக அமைந்தன. 
இதில் ஒரு ஆச்சரியம் உள்ளது. 'விடுதலை 1' படத்திற்கு இசை இளையராஜா, 'கருடன்' படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா. 
அடுத்து 'விடுதலை 2' படம் வெளியாக உள்ளது. அதுவும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. அதுவும் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றி தந்த நாயகனாகிவிடுவார் சூரி.
 
           
             
           
             
           
             
           
            