இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
மலையாளத்தில் பிரபல கதாசிரியரும் எழுத்தாளருமான எம்.டி வாசுதேவன் நாயரின் சிறுகதைகளை மையப்படுத்தி மனோரதங்கள் என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி உள்ளது. இதில் மோகன்லால், மம்முட்டி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் ஒவ்வொரு எபிசோடுகளிலும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்த ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் ஆசிப் அலியும், இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணும் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் ரமேஷ் நாராயணை வரவேற்கும் விதமாக அவருக்கு விருது கொடுத்து வரவேற்க நடிகர் ஆசிப் அலியை அழைத்தனர். அவரும் அந்த விருதை ரமேஷ் நாராயணிடம் தருவதற்கு வந்தார். ஆனால் சில நொடிகள் அதை வாங்குவதற்கு தயங்கிய ரமேஷ் நாராயண், பின்னர் அதை வெடுக்கென பறிக்காத குறையாக பிடுங்கிக் கொண்டு சற்று தள்ளி அமர்ந்திருந்த இயக்குநர் ஜெயராஜை நோக்கி சென்றார்.
இந்த களேபரத்தை பார்த்த இயக்குநர் ஜெயராஜ் எழுந்து வரவே அவரிடம் அந்த விருதை கொடுத்து மீண்டும் அவர் கையால் தனக்கு வழங்க செய்து பெற்றுக் கொண்டார். ரமேஷ் நாராயணனின் இந்த செயல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அது மட்டுமல்ல இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் ஆசிப் அலிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தும், ரமேஷ் நாராயணனின் செயலை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
இது பற்றி ரமேஷ் நாராயணன் கூறும்போது, நான் யாரையும் அவமதிக்கும் விதமாக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை. அப்படி யாரவது நினைத்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதேசமயம் இது குறித்து நடிகர் ஆசிப் அலியிடம் கேட்டபோது, இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுங்கள். அவர் இவ்வாறு நடந்து கொண்டதற்கு பெர்சனலாக சில காரணங்கள் ஏதாவது இருக்கலாம்.. இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க தேவையில்லை என்று பெருந்தன்மையாக கூறிவிட்டார்.
இதேபோல சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சைமா விருது விழாவில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நயன்தாராவிற்கு தன் கையால் விருது வழங்க வந்தபோது அதை மறுத்த நயன்தாரா, விழாவிற்கு தன்னுடன் வந்திருந்த தனது கணவர் (அப்போது காதலர்) விக்னேஷ் சிவன் கையால் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி அல்லு அர்ஜூனை அவமதிப்பது போல நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடந்திருப்பதும் அதே போன்ற ஒரு செயல் தான் என ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.