2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இந்த படம் சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமில்லாத 10 நடிகர்களை கொண்டு நட்பை மையப்படுத்தி உருவாக்கபட்டிருந்தது. மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூலித்தது. அது மட்டுமல்ல பாலிவுட் திரையுலகிலும் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் பாராட்டுகளையும் பெற்றது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது நேரடியாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் சிதம்பரம். பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாந்தம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தை தான் சிதம்பரம் இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனமே வெளியேற்றுள்ளது. ஆரம்பத்தில் இந்த படம் மஞ்சும்மேல் பாய்ஸ் ரீமேக்காக உருவாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இது புத்தம் புதிய கதையாக உருவாக இருக்கிறது என்றும், தற்போது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாக என்றும் தெரிகிறது.