'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஓடிடி தளங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது சிறிய பட்ஜெட் படங்கள், இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள் எல்லாம் தியேட்டர்களில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒடிடியில் நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்து விடலாம் என பெரிதும் நம்பின. ஆனால் அதற்கு மாறாக ஓடிடி நிறுவனங்கள் பெரிய படங்களை மட்டுமே வாங்குவதில் ஆர்வம் காட்டின. தற்போது அதிலும் புதிய சிக்கலாய் வருடத்திற்கு இவ்வளவு படங்கள் தான் வாங்கப்படும் என ஒரு புதிய கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டுள்ளதால் சில பெரிய நடிகர்களின் படங்கள் கூட ஓடிடியில் விலை போகாமல் தேங்கி நிற்கின்றன.
இந்தநிலை தான் தற்போது மலையாள நடிகர் திலீப் நடித்து, கடந்த 10 மாதங்களில் வெளியான பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அவரது மூன்று படங்களுக்கும் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது பவி கேர் டேக்கர் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மேலே சொன்ன இந்த மூன்று படங்களில் இந்த படம் தான் தியேட்டர்களில் சுமாரான வரவேற்பை பெற்றது என்பதாலும் சிறிய பட்ஜெட் படம் என்பதாலும் ஓடிடியில் முதல் படமாக விலை போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.