ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

அயலான் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வர உள்ள படம் ‛அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்த படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால் பட பணிகள் முடிய தாமதம் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் ‛அமரன்' படத்தை தீபாவளி அன்று அக்., 31ல் ரிலீஸ் செய்வதாக படத்தை தயாரித்துள்ள கமலின் ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.