ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள அவரது 50வது படம் ‛ராயன்'. தனுஷே இயக்கி உள்ளார். அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 26ல் படம் வெளியாக உள்ள நிலையில் பட ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. தற்போது இதன் டிரைலரை இன்று(ஜூலை 16) மாலை 6 மணியளவில் வெளியிட்டுள்ளனர்.
1:49 நிமிடம் ஓடக் கூடிய இந்த டிரைலர் வட சென்னை பின்னணியில், தாதா தொடர்பான கதையாக இருக்கும் என தெரிகிறது. எஸ்.ஜே.சூர்யா - தனுஷ் இடையேயான மோதல் தான் கதை என புரிந்து கொள்ள முடிகிறது. தனுஷ் ஆக்ரோஷமாக எதிரிகளை வெட்டி சாய்க்கிறார். டிரைலர் முழுக்க ஆக் ஷனும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ‛‛காட்டில் ஆபத்தான மிருகம் ஓநாய் தான்... பேய் மாதிரி வருவான்... இறங்கி செய்வான்...'' போன்ற வசனங்கள் தனுஷை குறிக்கும் விதமாக இடம் பெற்றுள்ளன.
இதன் படம் சென்சாரில் ஏ சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.