பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி |
ஹிந்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் புகழ்பெற்ற நடிகர் ரவி கிஷன். தமிழில் டி.ராஜேந்தர் இயக்கிய ‛மோனிஷா என் மோனலிசா' படத்தில் நடித்துள்ள இவர், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‛சங்கத்தமிழன்' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபர்ணா சோனி என்பவர் நானும் நடிகர் ரவி கிஷனும் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்ததாகவும் தனது மகள் சினோவா சோனிக்கு, ரவிகிஷன் தான் தந்தை என்றும் கூறி லக்னோ நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதை எதிர்த்து ரவி கிஷனின் மனைவி பிரீத்தி சுக்லா, அபர்ணா சோனி தன்னிடம் 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அபர்ணா சோனி, அவரது மகள் சினோவா சோனி மற்றும் கணவர் ராஜேஷ் சோனி ஆகியோர் மீது எப் ஐ ஆர் போடப்பட்டது.
இந்த நிலையில் இந்த புதிய வழக்கால் தனக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து ரவி கிஷன் மீது தான் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றும் அதற்கு பதிலாக ரவி கிஷனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் புதிய கோரிக்கை மனு அளித்துள்ளார் அபர்ணா சோனி. இதன் அடிப்படையில் நீதிமன்றம் அவரது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் ரவி கிஷனின் மனைவி, தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வாரா என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் தெரியவில்லை.