ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் |

இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்தது. இந்திய அளவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட்டின் முக்கிய குடும்பமான அமிதாப்பச்சன் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். நடிகர் அமிதாப் அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மகள் ஸ்வேதா, மகள் வழி பேரன் அகஸ்திய நந்தா, பேத்தி நவ்யா நவேலி ஆகியோருடன் ஒன்றாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
அவர்கள் அங்கிருந்து அரங்கிற்குள் நுழைந்த சிறிது நேரம் கழித்து அமிதாப்பின் மருமகளும், மகன் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவர் மட்டும் தனியாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தற்போது அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரது பிரிவு பற்றிய சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பலரும் இது குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படியான சர்ச்சை இதற்கு முன்பு வந்து பின்னர் அடங்கியது. இப்போது மீண்டும் எழுந்துள்ளது.




