தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

இந்திய சினிமாவின் ‛இசை ராஜா' இசையமைப்பாளர் இளையராஜா 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நாளை(ஜூலை 14) நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் அவரின் பல எவர் கிரீன் பாடல்கள் பாடப்பட இருக்கிறது. இளையராஜா உடன் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாட உள்ளனர். அதோடு நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஹங்கேரி இசை கலைஞர்களும் நிகழ்ச்சியில் இசையமைக்க உள்ளனர்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. அருண் ஈவன்ட் மற்றும் மெர்குரி நிறுவனத்தினர் இணைந்து இவ்விழாவினை நடத்துகின்றனர்.
மக்கள் போக்குவரத்திற்கு சிரமமின்றி வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு, அவசர உதவி, மருத்துவம், குடிநீர் என்று அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
அப்புறம் என்ன சென்னை வாசிகளே... இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையத் தயாரா...!




