புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில பாடல்களை தங்களது படங்களில் மீண்டும் சிலர் பயன்படுத்தியதைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பாடல்கள் இந்தக் காலத்திற்கும் பொருத்தமான விதத்தில் இருப்பதும் ஆச்சரியம்தான்.
தமிழ் சினிமா பாடல்களை தமிழ்ப் படங்களில் பயன்படுத்தியது போக தற்போது மலையாளப் படங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் 'குணா' படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு…' பாடல்தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்தப் பாடலைப் படத்தில் முக்கியமான இடத்தில் கேட்கும் போது புல்லரித்தது என்று சொன்னவர்கள்தான் அதிகம். அதனால்தான் அந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் பாடலுக்கு தன்னிடம் உரிமை வாங்கவில்லை என இளையராஜா தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கு அவர் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸும் பறந்தது.
அடுத்து 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற மலையாளப் படத்தில் 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'அழகிய லைலா' பாடலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பிருத்விராஜ், பாசில் ஜோசப், நிகிலா விமல், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் வெளிவந்த இந்தப் படமும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் ஓடிடியில் இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது. அதன்பிறகுதான் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தனர். அதில் தன் பழைய காதலியான நிகிலாவை படத்தின் நாயகன் மீண்டும் பார்க்கும் போது 'அழகிய லைலா' பாடல் ஒலிக்கும். பின் அடிக்கடி இந்தப் பாடல் இடம் பெறும். இந்தப் பாடலை சம்பந்தப்பட்ட உரிமை வைத்துள்ள இசை நிறுவனத்திடம் இருந்து முறையான அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தி உள்ளார்களாம்.
அடுத்தடுத்து இரண்டு மலையாளப் படங்களில் தமிழ்ப் பாடல்கள் இடம் பெற்று அவையிரண்டும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், இனி வரும் காலங்களில் இப்படியான பாடல்களை அடிக்கடி எதிர்பார்க்கலாம்.