இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். நேற்று திடீரென அஜித் சென்னை திரும்பினார். எதற்காக அவர் சென்னை வந்தார், படப்பிடிப்பு முடிந்துவிட்டதா, இல்லை மீண்டும் படப்பிடிப்பு நின்றதா என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அஜித் சென்னை திரும்பியதன் காரணம் தெரிய வந்துள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது. அதற்காகவே அவர் சென்னை திரும்பி உள்ளார். இன்று(ஜூலை 3) காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. ஷாலினி உடன் மருத்துவமனையில் அஜித் இருக்கும் போட்டோ வலைதளங்களில் வைரலானது.
எதற்காக ஷாலினிக்கு ஆபரேஷன் நடந்தது என்ற விபரம் வெளியாகவில்லை.