அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
கடந்த 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிப்பில் எதிரெதிர் துருவங்களாக நின்று ரசிகர்களை மகிழ்வித்து வருபவர்கள் ரஜினியும் கமலும். இப்போதும் கதாநாயகர்களாக இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக போட்டி போட்டு படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கிற படத்தில் நடித்துள்ளார். அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதேபோல ஷங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தியன் 2 படத்தில் கமல் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.
இந்தப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது ரஜினியும் கமலும் நீண்ட நாட்கள் கழித்து படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் வெளியாகி இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. அதே சமயம் அவர்கள் அந்த புகைப்படத்தில் தங்களது இயல்பான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இந்த நிலையில் கமல் இந்தியன் 2 கெட்டப்பிலும், ரஜினிகாந்த் வேட்டையன் கெட்டப்பிலும் ரசிகர் ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்தியன் 2வில் பல கெட்டப்புகளில் நடித்திருக்கும் கமல் இந்த புகைப்படத்தில் வயதான சீனரின் தோற்றத்தில் இருக்கிறார். இப்படி இருவரும் தங்கள் கதாபாத்திரத்தில் தோன்றும் அரிதான புகைப்படத்தில் இருவருடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபரை மிகவும் அதிர்ஷ்டசாலி என இருதரப்பு ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.