டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… |

நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்து அனிமல் என்கிற படத்தின் மூலம் வெற்றியையும் ருசித்து விட்டார். நேஷனல் கிரஷ் என அனைவராலும் புகழப்படும் அளவிற்கு தன்னை கொண்டாடும் ரசிகர்கள் அனைவரையும் பாசிட்டிவான விதத்தில் அரவணைத்தும் செல்கிறார் ராஷ்மிகா. குறிப்பாக அவ்வபோது சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி எந்த ஈகோவும் இல்லாமல் அவர்களது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லி அவர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது தலையில் இளநீரை வைத்தபடி அதை கைகளில் பிடிக்காமல் தான் நடித்த அனிமல் படத்தில் இடம்பெற்ற ‛ஜமால் குடு' என்கிற பாடலுக்கு தான் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. இந்த நடனம் குறித்து ராஷ்மிகா கூறும்போது, “தூக்கமில்லாமல் கழிந்த இரவுக்கு பிறகு என்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்காக நான் கையாளும் வழிகளில் இதுவும் ஒன்று. உங்களுக்காகவே இதுபோன்ற வித்தியாசமான சவால்களை செய்கிறேன்” என்று கூறியுள்ளார். வழக்கம் போல ராஷ்மிகாவின் இந்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.




