சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தசெ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த், பகத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோருடன் அமிதாப்பச்சன் நடிக்கும் படம் 'வேட்டையன்'.
இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் சூர்யாவின் 'கங்குவா' படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 'வேட்டையன்' படத்துடன் 'கங்குவா' படம் போட்டியிடுகிறது என்று சமூக வலைதளங்களில் பரவியது.
'வேட்டையன்' படம் எந்தத் தேதியில் வெளியாகும் என்று இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனால், அக்டோபர் 10ல் வெளியாகும் என பலரும் கூறி வருகிறார்கள். தசாரா விடுமுறை என்பதால் அந்த நாட்கள் சரியாக இருக்கும் என்பதால்தான் 'கங்குவா' படத்தின் தேதியை இப்போதே அறிவித்துவிட்டார்கள்.
'வேட்டையன்' படத்தை அதே அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவார்களா அல்லது தள்ளி வைப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும். அத்தேதியை விட்டால் தீபாவளிக்குத்தான் படத்தை வெளியிட முடியும்.