கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
தென்னிந்திய சினிமாவின் ‛இசைக் குயில்' பாடகி பி.சுசீலா. அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிக்கம் செலுத்திய பெண் குரல் இவருடையது. சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி உள்ள இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சினிமா மற்றும் முக்கிய விழாக்களில் பங்கேற்கிறார்.
இந்நிலையில் திருப்பதி சென்ற பி சுசீலா, எழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி மனம் உருக சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர், ‛நாராயண மந்திரம்' என்ற பக்தி பாடலை பாடியபடி மெல்ல நடந்து வந்தார். அவருடன் பலரும் போட்டோ எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது.