'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ் குமார். தங்கமீன்கள், குற்றம் கடிதல், தரமணி, பேரன்பு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தயாரித்தவர். பல படங்களை விநியோகமும் செய்துள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் ரூ.45 லட்சம் கடன் பெற்றுள்ளார் சதீஷ் குமார். கடனை திருப்பி செலுத்துவதற்காக இவர் அளித்த செக், வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்தது. இதையடுத்து சதீஷ் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ககன் போத்ரா. இந்த வழக்கு நீதிபதி சந்திரபிரபா முன் விசாரணைக்கு வந்தது. பணத்தை திரும்ப தராத சதீஷிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு கடனையும் வட்டியுடன் திரும்ப செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.