பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை |

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குபேரா படப்பிடிப்பிற்காக மும்பை விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் தனுஷூம் சென்றனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த நாகார்ஜூனாவை அவரது ரசிகர் ஒருவர் அருகில் நெருங்கி தொட முயற்சித்தார். நாகார்ஜூனாவை பின் தொடர்ந்து வந்த பவுன்சர் அவரை தள்ளிவிட்டார். பின்னால் வந்த தனுஷூம் இதை கண்டும் காணாதது போல நடந்து சென்றார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரது செயலும் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனைத் தொடர்ந்து நாகார்ஜூனா, இந்த நிகழ்வு பற்றி தனக்கு இப்போது தான் தெரிய வந்தது என்றும் அதற்காக தான் வருத்தப்படுகிறேன் என்றும் எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறி ஓரளவு சர்ச்சையை சமாளித்தார்.
அதன்பிறகு மறுநாள் படப்பிடிப்பிற்காக சென்றபோது பவுன்சர்களை ஒதுங்கி நிற்க சொல்லிவிட்டு, தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். நாகார்ஜூனாவின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் அதே மும்பை விமான நிலையத்திற்கு வந்த நாகார்ஜூனா, எப்படியோ தனது ஆட்கள் மூலமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பவுன்சர் மூலமாக தள்ளிவிடப்பட்ட அந்த ரசிகரை அழைத்து வரச் செய்து அவருடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இன்றைய சந்திப்பிலும் அந்த ரசிகர் அதே நிற உடையை அணிந்திருந்தார் என்பது ஆச்சர்யம். அதுமட்டுமல்ல அன்று அவரை தள்ளிவிட்ட அந்த பவுன்சரும் அந்த ரசிகரின் கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி நாகார்ஜூனா மீதான சர்ச்சையை முழுவதுமாக நிவர்த்தி செய்து விட்டது.