கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் சின்மயி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீடூ என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கியபோது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என குற்றம் சாட்டை பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதன்பிறகு அவர் தொடர்ந்து வைரமுத்து மீது குற்றச்சாட்டை சுமத்தி வந்ததால் தமிழ் சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமற்ற ரெட்கார்டு போடப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டார்.
சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தை நான் பார்க்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் சின்மயி. அதற்கு அவர் சொல்லும் காரணமும் வைரமுத்து தான்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் சின்மயி கூறும்போது, “பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி பேசுகின்ற இந்த மகாராஜா படத்தில் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார் என இப்போது தான் தெரிய வந்தது. தங்களுக்கு பிடித்தமான ஒரு நபர் மீது குற்றம் சாட்டியதற்காகவே ஒருவரை வேலை பார்க்க விடாமல் தடை செய்யும் ஒரே துறை தமிழ் சினிமா மட்டும்தான். அதனால் இந்த படத்தை நான் பார்க்கப் போவதில்லை. ஒருநாள், ஒரு கட்டத்தில் பழிவாங்கும் போக்கு அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பாலியல் வன்கொடுமையாளர்களை, பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு பல மடங்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.