பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த படம் 'டான்'. அப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ரஜினிகாந்த், விஜய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோரை சந்தித்து கதை சொன்னதாகச் சொன்னார்கள். ஆனால், எந்தப் படமுமே இறுதியாகவில்லை.
இந்நிலையில் மீண்டும் 'டான்' கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிபி சக்கரவர்த்தி, அனிருத், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் மீண்டும் இணைய உள்ளார்களாம். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகிறாராம்.
விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மகாராஜா' படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாம். எங்கெங்கோ சுற்றி வந்த சிபிக்கு கடைசியில் சிவகார்த்திகேயனே அடைக்கலம் கொடுத்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.