என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் பிறகு சிட்டாடல் வெப் சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் கமிட்டானார் சமந்தா. அதையடுத்து தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்து வெளியான ‛டங்கி' என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி, இப்படத்தை இயக்கப் போகிறார். அந்தவகையில், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த நிலையில் தற்போது சமந்தாவும் நடிக்கப்போகிறார்.