ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோனே நடித்துள்ள பிரமாண்ட சயின்ஸ் பிக் ஷன் படம் ‛கல்கி 2898 ஏடி'. மகாபாரதத்தை தழுவி இன்றைய காலக்கட்டத்துடன் இணைந்து இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 27ல் படம் வெளியாகும் நிலையில் மும்பையில் இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் பேசிய கமல், ‛‛ஹீரோவை விட வில்லனாக நடிக்கவே எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஹீரோயினுக்காக ஹீரோ காத்திருந்து காதல் பாட்டு எல்லாம் பாட வேண்டும். ஆனால் வில்லன் அப்படியில்லை தனக்கு பிடித்ததை செய்வான் கல்கியில் அதைத்தான் நான் மகிழ்ச்சியாக செய்திருக்கிறேன். சாதாரண மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்வார்கள். எனது குருநாதர் கே.பாலசந்தர் பார்க்க அரசு அதிகாரி போன்று இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கினார். அதேப்போல் இயக்குனர் நாக் அஸ்வினும் அசாதாரணமானவர் தான், பாராட்டுக்குரியவர்'' என்றார்.