பிளாஷ்பேக்: மகாத்மா காந்தி பார்த்த ஒரே சினிமா | பிளாஷ்பேக்: கவிஞருக்காக காட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் | 'ஸ்வீட்ஹார்ட்' படத்தால் 4 கோடி நஷ்டம்; வருத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜா | டெஸ்ட் - நேரடி ஓடிடி வெளியீட்டிலேயே பெரிய லாபம் | மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல் | 'இட்லி கடை' - இன்னும் தயாராகவில்லையா? | 'சிம்பு 49' படத்தில் சந்தானம்? ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் | 'கேம் சேஞ்ஜர்' கருத்து சொன்ன தமனை 'அன்பாலோ' செய்த ராம் சரண் | 'எல் 2 எம்புரான்' டிரைலர்களில் 'லைக்கா' பெயர் | ''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில்தான் ஆரம்பமாகி நடந்தது. ஆனால், ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. அது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன.
அஜித் அடுத்து நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் வேறு கலந்து கொண்டதால் 'விடாமுயற்சி' குறித்து பல சந்தேகங்களும் வெளியானது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று படக்குழு மூலம் தெரிய வந்தது.
தற்போது படத்தின் நாயகன் அஜித் குமார் கடைசி கட்டப் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என அடுத்த கட்ட வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கப் போகிறது என்கிறார்கள்.