ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா. கடந்த 2012ல் இவர்கள் திருமணம் செய்தனர். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். 42 வயதை கடந்துள்ள சினேகா இப்போதும் இளமையாக காணப்படுகிறார். அதற்கு காரணம் அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்க முறை தான். சிறு இடைவெளிக்கு பின் தற்போது விஜய் உடன் கோட் படத்தில் முதன்மை வேடத்தில் சினேகா நடித்துள்ளார்.
சினேகா அவ்வப்போது தனது குடும்பத்தாருடன் இருக்கும் போட்டோவையும், உடற்பயிற்சி செய்யும் போட்டோவையும் வெளியிட்டு வருவார். தற்போது தனது மகன் உடன் உடற்பயிற்சி செய்யும் போட்டோவை பகிர்ந்துள்ளார் சினேகா. அதன் உடன் ‛‛நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அதையே அவர்கள் செய்கிறார்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், விஹான் தனது அம்மா சினேகாவிற்கே டப் கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்து வருவதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.